கோடையில் ஏற்படும் சிறுநீர் பிரச்சனையை சமாளிக்க... கோடைக்காலத்தில் உடலுக்கு தேவையான அளவு நீர்சத்து ஆகாரங்கள் குடிக்காமால் இருப்பதால், இதனால் சிறுநீர் வெளியேறும் அளவு குறைகிறது. இதனால் சிறுநீர் சற்று அடர்த்தி அதிகமாகி சற்று அடர் மஞ்சள் நிறமாக வெளியேறுகிறது. இதனால் எரிச்சல், வலி, மற்றும் கடுப்பும் ஏற்படுகிறது. சிறுநீரகத்தில் தான் இரத்தமானது சுத்திகரிக்கப்பட்டு, இரத்தத்தில் உள்ள கெட்ட நீரான சிறுநீரை பிரித்தெடுக்கும். காரணம்: வெகு நேரம் சிறுநீர் கழிக்காமல் அடக்கி வைப்பதாலும் இந்த பிரச்சனை ஏற்படுகிறது. சிறுநீரக பிரச்சனைகள் ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் ஏற்படும். சிறுநீரக பாதையில் ஈகோலை என்னும் கிருமியால் தொற்று ஏற்பட்டு சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் உண்டாகிறது. இது வெயில் காலங்களில் பன்மடங்காக பெருக வாய்ப்புள்ளது. வெளியேறும் சிறுநீரின் அளவு குறைவதால் உப்பு கலந்த கழிவு பொருட்கள் வெளியேரமால், கொஞ்சம், கொஞ்சமாக படிந்து சிறுநீர் கற்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அறிகுறிகள்: அடிக்கடி சிறுநீர் கழிக்கலாம் போன்று உணர்வு வரும். சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், மற்றும் வலி ஏற்படும...
Nice
ReplyDelete