பிளஸ் 2 பாட திட்டத்தில் மாற்றம்*
சென்னை : பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் பல மாற்றங்களை கொண்டு வந்த தமிழக பள்ளி கல்வித்துறை, பிளஸ் 2 பாட திட்டத்திலும் மாற்றம் கொண்டு வர உள்ளது. .
இதன்படி, பிளஸ் 2 பொதுத் தேர்வில் பாடவாரியான மொத்த மதிப்பெண் 200 லிருந்து 100 ஆக குறைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தேர்வு நேரத்தையும் 3 மணி நேரத்திலிருந்து 2.30 மணி நேரமாக குறைக்கவும் பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.
Comments
Post a Comment